பென்சில்வேனியா பல்கலைக்கழகம். மெக்கானிகல் இஞ்சினியரிங் துறை வழக்கத்தைவிடப் பரபரப்பாக இருந்தது. கல்லூரிப் ப்ராஜெக்ட்டை சிறப்பாக முடிக்க மாணவர்கள் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஜான் டெர்னஸ்.
பிறரைவிட ஜான் கூலாக இருந்தார். காரணம் அவருடைய ப்ராஜெக்ட்டின் மீது அவருக்கிருந்த நம்பிக்கை.
குவாட்ரிப்லீஜியா ஒரு கடுமையான நோய். கழுத்துக்குக் கீழே முழு உடலையும் முடக்கிவிடும். இவர்களுக்கு உதவுவதற்காக ரோபாட்டிக் கை ஒன்றை வடிவமைத்திருந்தார் ஜான்.
இது அன்னமிடும் கை. தட்டிலிருந்து உணவை எடுத்து ஊட்டிவிடும். தலையசைவின் மூலமே இந்தக் கையை கட்டுப்படுத்த இயலும்.
ப்ராஜெக்ட்டை டெமோ செய்யுமாறு ஜானை அழைத்தனர். மிகத் துல்லியமாக இயக்கிக்காட்டினார். இந்த ப்ராஜெக்ட் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. வெகுவாகப் பாராட்டப்பட்டது.















Add Comment