ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சித் தாவி பாஜகவில் இணைந்துள்ளது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் பத்து மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு இப்போது மூன்று உறுப்பினர்களே எஞ்சியுள்ளனர்.
பத்தில் ஏழு பேர் பிரிந்ததனால், அவர்களுடைய எம்.பி பதவிகள் கட்சித் தாவல் சட்டத்தின்படி பறிபோகாமல் தப்பியுள்ளன. ஆத் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய சகாவாக இருந்த ராகவ் சத்தா தலைமையில் இந்த ஏழு எம்.பிக்களும் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இந்த இணைப்பைத் துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவையின் சபாநாயகருமான சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்றுக் கொண்டுள்ளார். இதன் மூலம் மாநிலங்களவையில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நெருங்கியுள்ளது.















Add Comment