Home » எரியாத நாளில்லை – 18
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 18

18. கண் மருத்துவர் கையில் தேசம்

ஹஃபீஸ் அசாத்தின் இரண்டாவது மகன் பஷர் அல்-அசாத். தந்தையைப் போலல்லாமல் அதிகாரம், ராணுவம் போன்றவற்றில் ஆர்வமற்றவராக இருந்தார். ஹஃபீஸ் அசாத்தும் பஷரின் இந்த விலகல் மனோபாவத்தைப் பொருட்படுத்தவில்லை. ஏற்கெனவே மூத்த மகனான பஸலைத் தன் அரசியல் வாரிசாகத் தயார் செய்து கொண்டிருந்தார்.

ஒரு சாதாரண வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க விரும்பிய பஷர், லண்டனுக்குச் சென்று கண் மருத்துவம் படிக்க முடிவு செய்தார். அப்படிப் படித்துக் கொண்டிருந்தவரை அவசரமாக நாடு திரும்பச் சொன்னார் ஹஃபீஸ். தந்தையின் கோரிக்கையை ஏற்று மருத்துவப் படிப்பைக் கைவிட்டார் பஷர்.

இன்னொரு மகனான மஹெர் ராணுவத்தில் இருந்தாலும், ஹஃபீஸுக்கு அவர் மீது நம்பிக்கையில்லை. பஷர் அமைதியானவர். ஐரோப்பாவில் நவீனக் கல்வி கற்றவர். சமயோஜிதத்துடன் செயல்படக்கூடியவர். அரசியல் அனுபவம் மட்டும்தான் இல்லை, ஆனால் அதைக் கற்றுக் கொடுக்க முடியும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!