Home » ஓட்டுப் போடுங்கள்!
நம் குரல்

ஓட்டுப் போடுங்கள்!

வாக்களிக்கத் தகுதி படைத்த முதல்முறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாழ்த்துகள். தேர்தல் திருவிழாவின் இறுதி நாளுக்கு வந்துவிட்டோம். பல வாரங்களாகச் சுற்றிச் சுழன்று வாக்கு கேட்ட வேட்பாளர்களின் வேலை முடிவுக்கு வந்துவிட்டது. இடைவிடாத பிரசாரங்களும் தேர்தல் விளம்பரங்களும் ஆட்கொண்டிருந்த நாள்களைக் கடந்துவிட்டோம். இனி நம்மை ஆளப்போகும் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு வாக்காளர்களாகிய நமக்குக் காத்திருக்கிறது.

ஐந்தாண்டு கால ஆட்சியை ஒரு கட்சியையோ கூட்டணியையோ நம்பி ஒப்படைப்பது என்பது வாக்குச்சீட்டில் முத்திரை இடுவது மட்டுமே அல்ல. மக்களின் நம்பிக்கையையும் விருப்பத்தையும் எதிர்காலத்தையும் அவர்களிடம் ஒப்படைக்கும் ஒரு ஜனநாயக ஒப்பந்தம். ஜனநாயக நாட்டில் ஆட்சி அதிகாரத்தை மாற்றும் வல்லமை வாக்காளர்களின் கைகளில் மட்டுமே உள்ளது.

வாக்களிப்பது என்பது நம் ஜனநாயக உரிமை. வாக்கை அலட்சியமாகப் பார்ப்பதோ, யாருக்கு வாக்களித்தால் என்ன என்று எண்ணுவதோ தவறானது. ஒரு வாக்குகூட பெரிய மாற்றத்தை உருவாக்கும் வலிமை பெற்றது என்ற பொறுப்புணர்வுடன் சிந்தித்துச் செயல்படுங்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!