நெருக்கடி நிலைக் காலத்தில், இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மக்கள்தொகையைத் திறம்படக் கட்டுப்படுத்தின தென் மாநிலங்கள். அதே நேரம் சில வட மாநிலங்களால் இந்திய அரசு நிர்ணயித்த இலக்கை அடைய முடியவில்லை. சரி, ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கின்றன என்று கடந்து போய்விடலாம்தான். ஆனால், இந்த விஷயத்தை அப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியாதபடி செய்துள்ளன தொகுதி மறுவரையறை குறித்த பேச்சுகள்.
தென் மாநிலங்கள் மக்கள்தொகையை எப்படிக் கட்டுப்படுத்தின, வட மாநிலங்களால் அதை ஏன் செய்ய முடியவில்லை என்பது குறித்த விவாதங்கள் பரவலாக நடந்து வருகின்றன. இந்த விஷயத்தை நாம் ஆதியிலிருந்து அணுகுவோம்.
இந்தியா சுதந்தரம் அடைந்த புதிது. தேசத்தின் முன் எண்ணற்ற சவால்கள் காத்திருந்தன. வெள்ளையர்களால் சிதிலமடைந்திருந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. முப்பத்தைந்து கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டியிருந்தது. உள்கட்டமைப்பு, சுகாதார வசதிகள், சமூகப் பாதுகாப்பு, தேசப் பாதுகாப்பு போன்ற பலவற்றைக் குறித்தும் சிந்திக்க வேண்டியிருந்தது.















Add Comment