Home » படித்தவள்
கிச்சன் கேபினட்

படித்தவள்

அபிகெயில்

அபிகெயில் பவர்ஸ்

நியூயார்க் மாநிலத்தின் சாரடோகா கவுண்டியில் 1798 மார்ச் 13ஆம் தேதி பிறந்தார் அபிகெயில் பவர்ஸ் (Abigail Powers). தந்தை லெமுவேல் பவர்ஸுக்கும், தாய் அபிகெயில் நியுலாண்டுக்கும் பிறந்த எழுவரில் கடைசிக் குழந்தை. அபிகெயிலுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே தந்தை காலமாகிவிட்டார்.

மிகுந்த மன உறுதியும் கல்வியில் ஈடுபாடும் கொண்ட அன்னை, குடும்பத்தை மேற்கு நோக்கி அழைத்துச் சென்றார். அங்கே குறைந்த பணம் கொண்டு எல்லைப்புற நிலங்களில் வாழலாம் என்ற நம்பிக்கை இருந்தது. கணவர் விட்டுச்சென்ற பெரிய நூல் தொகுப்பு மட்டுமே அவர்களிடம் இருந்த செல்வம்.

அபிகெயிலின் தாய் ஓர் ஆசிரியை; அந்த நூல்களின் உதவியோடு குழந்தைகளுக்கு வழக்கமான கிராமப்புற வாழ்க்கையை விட உயர்ந்த கல்வியைக் கொடுத்தார். புத்தகங்கள் — வறுமையிலும் வற்றாத செல்வம். அன்னையின் கை பிடித்து, தந்தை விட்டுச்சென்ற நூல்களின் பக்கங்களில் அபிகெயிலின் சிந்தனை விரிந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!