ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் சுடச்சுடத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆளுங்கட்சியான ஃபிடெஸ் கட்சி தோற்று, எதிர்க்கட்சியான திஸ்ஸா கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இந்நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவு ஒருவகையில் எதிர்பார்த்ததுதான் என்றாலும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காரணம், வெற்றி பெற்ற பீட்டர் மக்யார் (Peter Magyar) தோற்கடித்தது விக்டர் ஆர்பான் (Viktor Orbán) என்ற சர்வாதிகாரப் பிரதமரை.
விக்டர் ஆர்பான் தனது தோல்வியையும் ஆட்சி மாற்றத்தையும் ஒப்புக்கொள்வார் என்பது பலரும் எதிர்பார்க்காத ஒன்று. ஏனெனில் சர்வாதிகாரம் எப்போதும் தனது அதிகாரத்தை எளிதாக விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை.
ஐந்து முறை, மொத்தம் இருபது ஆண்டுகள் ஹங்கேரியின் பிரதமராக இருந்தவர் விக்டர் ஆர்பான். அதிலும் நான்கு முறை தொடர்ந்து தேர்தலில் வென்று, பதினாறு ஆண்டுகள் தொடர்ச்சியாக அசுர பலத்துடன் ஆட்சியிலிருப்பவர்.















Add Comment