நம் அனைவருக்கும் ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரம். இதில் பாரபட்சம் கிடையாது. இந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றி தீர்மானமாகிறது. எப்படிப் பயன்படுத்துவது என்பது திட்டமிடலில் உள்ளது. நேரம் வீணாவதையும் தேவையற்ற செயல்களில் நம்மை அறியாமலே நேரம் செலவழிப்பதையும் தடுக்கப் பல விதமான அணுகுமுறைகளையும் கருவிகளையும் கையாளுகிறோம். ஆனால் நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கிறதா?
உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEOs) எவ்வாறு ஒரு நாள் பொழுதைத் திட்டமிடுகிறார்கள் என்று அறியத் தேடினோம். அவர்களின் செயல் முறையில் இருந்து நமக்கு உதவக்கூடிய நுட்பங்களை அடையாளம் காண முடிந்தால் நல்லதுதானே?
Add Comment