Home » நாம் ஒருவர் நமக்கு இருவர்
இன்குபேட்டர்

நாம் ஒருவர் நமக்கு இருவர்

மெய்நிகர் உலகில் விளையாடும் போது நமக்கென ஒரு அவதார் உருவாக்குகிறோம். அங்கு அந்த அவதார் நம்மைக் குறிக்கிறது. இந்த அவதார் நமது பொழுதுபோக்குக்கானதே தவிர நமக்கு வேறு எந்த விதத்திலும் உபயோகமற்றவை.

டிஜிட்டல் ட்வின் என்பது இவ்வுலகில் இருக்கும் ஒரு பொருளை அப்படியே டிஜிட்டல் வடிவில் உருவமைப்பது. இத்தொழில்நுட்பம் ஏற்கனவே பல துறைகளில் பயன்பாட்டில் உள்ளது. உதாரணமாக ஒரு கட்டடத்தை முழுமையாக டிஜிட்டல் பிரதி எடுக்கலாம். அதில் மாற்றங்களைச் செய்து அவை எப்படி இருக்கின்றன என்று டிஜிட்டலாகப் பார்க்கலாம். அதன் பின்னர் எது நாம் எதிர்பார்த்த மாதிரி வருகிறதோ அதனை அந்த நிஜக் கட்டடத்தில் நாம் உருவாக்கலாம்.

இதே போல மனிதர்களின் டிஜிட்டல் இரட்டையர்களை உருவாக்க முடியுமா? அப்படி உருவாக்க முடியுமானால் அதனால் நமக்கு என்ன பயன்?

உலகில் உள்ள சடப் பொருட்களைப் போன்றது அல்ல மனித உடல். உயிரினங்களைச் சடப்பொருட்களை மாடல் செய்வது போல டிஜிட்டல் மாடலிங் செய்ய முடியாது. நாம் அனைவரும் பொதுவாக ஒரே உறுப்புகளைக் கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறோம். காரணம் எமக்கெனத் தனித்தன்மை உள்ளது. ஒரே பெற்றோர்களுக்குப் பிறந்த சகோதரர்களுக்கிடையிலேயே பாரிய வித்தியாசங்கள் உள்ளதை நாமறிவோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!