நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு , ஷார்ஜாவில் உள்ள இந்திய அமைப்பு (Indian Association of Sharjah) ஒரு கோரிக்கை விடுத்துள்ளது. அதில், துபாய் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் எவ்வளவு தங்கம் எடுத்துச் செல்லலாம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதன் மூலம் பூனைக்கு யார் மணி கட்டுவது என்றிருக்கும் ஒரு பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த வாரம் கொச்சி விமான நிலையத்தில் சுங்கவரி அதிகாரிகள் செய்த ஒரு செயல்தான் இதற்குக் காரணம். ஷார்ஜாவிலிருந்து வந்த விமானத்தில், பிரதீப் நெம்மரா தனது மகனின் திருமணத்துக்காக வந்திருக்கிறார். மருமகளுக்குப் பரிசளிப்பதற்காக அங்கிருந்து இரண்டு தங்க வளையல்களை வாங்கி வந்துள்ளார். அவற்றின் மொத்த எடை முப்பது கிராம்தான். ஆனால் அது அவருக்குப் பல மணிநேர மன உளைச்சலைத் தந்துவிட்டது.
சுங்க அதிகாரிகளிடம் வளையல்களைப் பற்றிய விவரங்களை விளக்கியும் எந்தப் பிரயோஜனம் இல்லை. அங்கிருந்த அதிகாரி பதினேழாயிரம் ரூபாய் தர வேண்டும் அல்லது முப்பத்தைந்து சதவீதம் வரி கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளார். இப்படி எத்தனையோ பயணிகள் சுங்கவரி அதிகாரிகளிடம் சிக்கி சின்னாபின்னமான கதைகள் பல உண்டு. ஆனால் பிரதீப் விடவில்லை. ரூபாய் எதுவும் செலுத்தப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்லி இருக்கிறார்.














Add Comment