மத்திய அரசின் நிக்கோபார் தீவுத் திட்டம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சோனியா காந்தி ‘தி இந்து’ நாளிதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்தத் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் அமைப்பைச் சீர்குலைக்கும் பேராபத்தான திட்டம் என்று கடுமையாகக் கண்டித்துள்ளார். ஷோம்பென், நிக்கோபாரிஸ் போன்ற பழங்குடியினர் ஆபத்தில் இருக்கும்போது, நாட்டு மக்களின் மனசாட்சி அமைதியாக இருக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிக்கோபார் தீவு உள்ளது. இங்கு ‘தி கிரேட் நிக்கோபார் தீவுத் திட்டம்’ என்ற மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. சுமார் 72 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ள இந்த மெகா திட்டத்தின் கீழ் நிக்கோபாரில் ஒரு சரக்கு மாற்றுத் துறைமுகம் (Transhipment Hub), ஒரு திட்டமிடப்பட்ட நகரம் (Township), ராணுவ விமானத் தளமாகவும் பயன்படுத்தக் கூடிய ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு சூரிய மின் உற்பத்தி நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இந்தத் திட்டம் 2021ஆம் ஆண்டில் நிதி ஆயோக் அமைப்பினால் முன்மொழியப்பட்டுத் தொடங்கப்பட்டது.















Add Comment