கடந்த பத்துப் பதினைந்து நாட்களில் நீங்கள் யாரிடம் பேசியிருந்தாலும் சளி, காய்ச்சல் போன்ற வார்த்தைகள் இல்லாமல் அந்த உரையாடல் முடிந்திருக்காது. அட, குறைந்தபட்சம் இரண்டு ‘லொக் லொக்’ ஒலியாவது கட்டாயம் அந்த உரையாடலில் இருந்திருக்கும்.
இரண்டு வாரங்களுக்கு முன் எச்3என்3 பரவல் செய்தி வந்ததும் தமிழ்நாடு அரசு ஆயிரம் முகாம்கள் நடத்துவதாக அறிவித்தது. நமது நிருபர் எவ்வளவு முயன்றும் ஒரு முகாமைக்கூடக் கண்டுபிடித்துப் பயன் பெற்றவர் விபரங்களை அறிய முடியவில்லை. போதிய விளம்பரம் இல்லையா அல்லது மக்கள் ஆர்வம் காட்டவில்லையா என்பதற்கு அரசுதான் விளக்கம் சொல்ல வேண்டும். அதைவிடப் பெரிய மர்மமாக இப்போது இருக்கும் காய்ச்சலுக்கு அடுத்த மாதம் நடக்க இருந்த தேர்வுகளை முன்கூட்டியே மாற்றி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது அரசு. புதுச்சேரியில் ஏற்கனவே பல வகுப்புகளுக்கு விடுமுறை அறிவித்து விட்டார்கள். இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது என அரசு ஒரு புறம் அறிவிக்கிறது. கோவிட் எண்ணிக்கை உயர்கிறது, பிரதமர் அதிகாரிகளுடன் ஆலோசனை என மறுபுறம் செய்திகள் வெளியாகின்றன.
Add Comment