யாருடைய அலைபேசியிலும் சிக்னல் இல்லை. யாருக்கும் அழைக்க முடியாது. அலைபேசி, இணையம், தரை வழித் தொடர்பு என எதுவும் சாத்தியமில்லை. சமூக ஊடகங்களைத் திறக்கவும் முடியாது. வீட்டுக்கு வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. எமர்ஜென்சி எண்களும் வேலை செய்யாது. இப்படி ஒரு நாள் விடிந்தால் எப்படி இருக்கும்.? தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என நினைத்திருந்தீர்களெனில்… அதை மறந்து விடுங்கள்.
கடந்த வாரம் – நவம்பர் 8ஆம் தேதி – அப்படியொரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்தது. 10 மில்லியனுக்கும் மேல் சந்தாதாரர்களைக் கொண்ட ஒரு அலைபேசி நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அந்த மக்களைப் பதற்றத்திற்கு உள்ளாக்கியது. ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள். என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அந்த நிறுவனத்திற்கும்கூட. எதுவும் வேலை செய்யவில்லை என்பது மட்டும்தான் அவர்களுக்கும் அப்போதைக்குத் தெரிந்திருந்தது.
Add Comment