அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இரான் மீது முழு வீச்சில் போர் புரிவதாக இரான் அதிபர் மசூத் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு மசூத் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஜூன் 2025இல் இஸ்ரேலுக்கும் இரானுக்கும் நடந்த பன்னிரண்டு நாள் போருக்குப் பின் இந்தச் சந்திப்பு டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்றது.
ஜூன் 2025இல் இரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியது. இரான் ரகசியமாக அணுஆயுதங்களைத் தயாரிப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து, தன் பங்குக்கு இரானின் மூன்று அணுசக்தி நிலையங்களைத் தாக்கியது. இந்தப் போரில் இரான் கடும் இழப்புகளைச் சந்தித்தது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் முப்பது பேர் வரை கொல்லப்பட்டனர்.
இரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து ஜெர்மனி, ஃபிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இரான் மீது பொருளாதாரத் தடை விதித்தன. இதனால் இரானின் பிரதான வருவாய் ஆதாரமான எண்ணெய் வணிகம் கடும் பாதிப்புக்குள்ளானது.















Add Comment