என் சக எழுத்தாளக் கூட்டாளிகள் அனைவரிடமும் அவர்கள் சொன்னபடி கேட்கும் ஒரு ஜின் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஜின் என்பது நாம் சொன்னபடி கேட்டு, நம்மை மேன்மை அடையச் செய்யும் ஒரு நல்ல குட்டிச்சாத்தான் என்று பேசிக்கொண்டார்கள். அது ஒரு வதந்தி என்று புரியாமல் அதில் மாட்டிக் கொண்டவர்களுள் நானும் ஒருத்தி.
நமக்கும் அந்த ஜின் வந்து உதவி செய்தால் எண்ணிலடங்கா நாவல்களை எழுதி முடிக்க முடியுமே என்று தோன்றியதால் வந்த வினை.
இந்த ஜின் என்பது எப்படி இருக்கும் என்று தெரியாது.
அதை எப்படி நம் வீட்டிற்கு வரவழைப்பது என்று தெரியாது.
அதை எப்படி நாம் சொன்னதெல்லாம் செய்யும் செல்லப் பிள்ளையாக மாற்றுவது என்றும் தெரியாது.















Add Comment