அமெரிக்கத் தேர்தல் கல்யாணம் தாலி கட்டும் கட்டத்தைத் தொட்டுவிட்டது. 700 இலட்சம் மக்கள் வாக்குப் பதிவு செய்துவிட்டனர்.
மக்களாட்சியில் ஒருவர் வெற்றியும் மற்றவர் தோல்வியும் பெறுவார். தோற்றவர் அன்றே தன் தோல்வியை ஒப்புக்கொள்வதோடு அமெரிக்கத் தேர்தல் முடிந்துவிடும். ஆனால், 2020இல் எப்போது முன்னாள் அதிபர் டிரம்ப் தோற்றாரோ அன்றிலிருந்து ஆரம்பமானது புதிய வழக்கம்.
2010 தேர்தலில் தோற்றபோதே போர்க்கள மாநிலங்களில் வழக்கு பதிந்து மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டன. சரியான வாக்குகள் என ஒப்புக்கொள்ளப்பட்டு அதிபர் டிரம்ப்பின் குற்றச்சாட்டுகள் அடிப்படை இல்லாதவை என நிரூபணம் ஆகி தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனாலும் அதிபர் பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாமல், டிரம்ப்பின் தூண்டுதலால், காபிடல் ஹில்லின் மேல் தாக்குதல் நடத்தப்பட்டது. பலர் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். டிரம்ப்பின் மீதே வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.
தேர்தல் முறையில் இத்தனை அவநம்பிக்கை ஏற்படுத்திய வேட்பாளரை எந்தத் தேர்தலும் இதுவரை சந்தித்ததில்லை. இந்தியாவில் நடக்கும் தேர்தல் காலக் காட்சிகளை இந்த முறை அமெரிக்கத் தேர்தல் நினைவூட்டியது. டிரம்ப் மெக்டனால்டில் கடைநிலை ஊழியராக மாறி உருளைக் கிழங்கு வறுவல் பரிமாறினார். தன் பேச்சை அதிபர் பைடன் குப்பை எனச் சொன்னதால் குப்பை வண்டியில் பயணம் செய்து பேசினார். இப்படிப் பல நாடகக் காட்சிகள் அரங்கேற்றவும் தவறவில்லை.
இந்த நிலையில் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லுவதால் மூளைச் சலவை செய்யப்படுவது போல, பலரும் அவருடைய பொய்யை நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
Add Comment