Home » காசிமாயன் குளம்
சிறுகதை

காசிமாயன் குளம்

“அப்பல்லாம் இவ்ளோ பெரிய ரோடு கெடயாது தம்பி”. காசிமாயன் இப்படித்தான் என்னிடம் பேச்சைத் தொடங்கினார்.

அவருக்கு அறுபத்தைந்து வயதிருக்கலாம். ஒடிசலான கருத்த தேகம். குழிவான கண்கள். தடித்த ஒழுங்கற்ற இமைகள். வெள்ளைத் தாடி அழுக்காக இருந்தது.

கையிலிருந்த கிளாஸில் பாதியளவு டீ. அதை ரோட்டின் பக்கமாக நீட்டிக் காட்டியவாறு பேச்சைத் தொடர்ந்தார்.

வண்டிங்க கூட ஒண்ணோ இரண்டோதான் வரும் தம்பி. எப்பயாச்சும் போலீஸ் ஜீப்பு போகும். இந்த ரோட்ல வேகமாகப் போற வண்டின்னா சரக்கு லாரிங்கதான்.

என்னிடம் ஏன் இதையெல்லாம் சொல்கிறார் எனப் புரியவில்லை. ஆர்வமாகச் சொன்னார்.

நான்கைந்து முறை இதே டீக்கடையில் பார்த்திருக்கிறேன். லேசாகச் சிரிப்பார். இப்போதுதான் முதல் முறையாகப் பேசுகிறார்.

அவர் பேசிக்கொண்டிருந்த போதே ஏதோவொன்று வித்தியாசமாகப்பட்டது. அவரது தொப்பி. சிவப்புத் தொப்பி.

நைந்திருந்த அவரது உடைகளுக்கும் அத்தொப்பிக்கும் பொருந்தவேயில்லை. பழைய மகிமையின் மிச்சம் போல.

எதிரே நின்றிருந்த என்னுடைய காரை காட்டி, “எவ்ளோ தருது” என்றார்.

நான் பதில் சொல்லும்வரை பொறுத்திருக்கவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!