சந்திரனில் தரையிறங்கிய முதல் இந்திய செயற்கைக்கோள் சந்திரயான்-1. இந்தப் பயணத்திற்குப் பின்னணியில் செயல்பட்ட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே. கஸ்தூரிரங்கன் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது எண்பத்து நான்கு. இந்திய விண்வெளித் துறைக்கு மட்டுமல்லாமல் வானியற்பியல், கல்வித்துறை வளர்ச்சிக்கும் அவருடைய பங்கு அளப்பரியது.
இந்தியாவின் மூன்று முக்கியமான சிவில் விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்ற கே. கஸ்தூரிரங்கன் பன்முக ஆளுமை கொண்டவர். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (ISRO) தலைமை தாங்கியவர். இஸ்ரோவில் பணிக்காலம் நிறைவடைந்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினரானார். 2020ஆம் ஆண்டு தேசிய புதிய கல்விக் கொள்கையை உருவாக்கத் தலைமை தாங்கியுள்ளார். அவரது பதவிக் காலத்தில்தான் இந்தியாவின் இரண்டு முக்கியமான ஏவுகணைகள் விண்வெளியில் செலுத்தப்பட்டன.
1940ஆம் ஆண்டு அக்டோபர் இருபத்து நான்காம் தேதி கொச்சி ராஜ்ஜியத்தில் (அப்போது கேரள மாநிலம் உருவாக்கப்படவில்லை) இருந்த எர்ணாகுளத்தில் பிறந்தார் கஸ்தூரிரங்கன். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கஸ்தூரிரங்கனின் மூதாதையர்கள் கேரளாவில் குடியேறிவிட்டனர். கல்விப் பின்புலம் உள்ள குடும்பம் கஸ்தூரிரங்கனுடையது. அவருடைய தாய்வழித் தாத்தா ஸ்ரீ அனந்தநாராயண ஐயர் எர்ணாகுளத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றினார். அவருடைய நேர்மை அவருக்கு அந்தப் பகுதியில் நற்பெயரையும் மரியாதையையும் பெற்றுத் தந்திருந்தது. அவருடைய மூத்த மகள் விசாலாட்சிதான் கஸ்தூரிரங்கனின் தாயார்.
Add Comment