அமெரிக்க வரலாற்றில் மிகவும் நேசிக்கப்பட்ட முதல் பெண்மணிகளில் ஒருவர் கிரேஸ் கூலிட்ஜ் (1879–1957). தனது வசீகரமான புன்னகையாலும், நாகரிகமான ஆடை அலங்காரத்தாலும், சமூகச் சேவையாலும் அமெரிக்க மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
கிரேஸ் 1879இல் வெர்மாண்ட்டில் பிறந்தார். இவரது தந்தை நீராவிக் கப்பல் ஓட்டுநராகவும், தாய் இல்லத்தரசியாகவும் இருந்தனர். சமையல், பியானோ, ஆடைப்பூப் பின்னல் போன்ற பல திறன்களையும், பனிச்சறுக்கு, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளையும் கற்றார்.
பள்ளிப் பருவத்தில் ஒருமுறை வாஷிங்டன் சென்றிருந்தபோது, வெள்ளை மாளிகையைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிரேஸுக்குக் கிடைத்தது. அங்கே வைக்கப்பட்டிருந்த ஒரு அழகான பியானோவைப் பார்த்ததும், இசை மீது தீராத ஆர்வம் கொண்ட கிரேஸ் அதைத் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்தனர். அப்போது அங்கிருந்தவர்களிடம் ஒரு தீர்க்கதரிசனமான வார்த்தையைச் சொன்னார், ‘ஒருநாள் இதே பியானோவை வாசிக்க அதிகாரத்துடன் வருவேன்’.
சொன்னபடியே, பின்னாளில் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக அதே மாளிகைக்குள் நுழைந்த கிரேஸ், அந்த பியானோவில் இசை மீட்டியது மட்டுமின்றி, உலகப் புகழ்பெற்ற பாடகர்களை அழைத்து வெள்ளை மாளிகையில் கச்சேரிகளை நடத்தி மகிழ்ந்தார்.















Add Comment