Home » ஊருக்கு நல்லது செய்வேன்!
கிச்சன் கேபினட்

ஊருக்கு நல்லது செய்வேன்!

லூசி வேர் வெப் ஹேய்ஸ்

லூசி வேர் வெப் ஹேய்ஸ்

கல்லூரிப் பட்டம் பெற்ற முதல் – முதல் பெண்மணி லூசி வேர் வெப் ஹேய்ஸ் (Lucy Ware Webb Hayes). இவர் பாலின, இனச் சமத்துவம் பேசும் முதல் பெண்மணியாக இருந்ததோடு அதைக் கடைப்பிடிக்கவும் செய்தார். வெள்ளை மாளிகைக்குள் அனுமதி மறுக்கப்பட்டிருந்த கறுப்பினத்தவர்கள், இவர் முதல் பெண்மணியானதும் முதல் முறையாக விருந்தினர்களாக அழைக்கப்பட்டார்கள்.

லூசி வெப் ஆகஸ்ட் 28, 1831 அன்று ஒஹையோவின் சில்லிகோத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் டாக்டர் ஜேம்ஸ் வெப் மற்றும் மரியா குக். லூசியின் இரண்டு சகோதரர்களுமே மருத்துவர்கள். இவரது தந்தை கெண்டக்கியில் உள்ள தனது பரம்பரை வீட்டுக்குச் சென்றபோது, தனது அத்தையிடம் இருந்து பெற்ற நூற்று இருபது அடிமைகளை விடுதலை செய்தார்.

அந்த நேரத்தில் காலரா தொற்றுநோய் பரவியது, ஜேம்ஸ் நோயுற்றவர்களைக் கவனித்துக் கொண்டபோது அவரும் காலராவால் பாதிக்கப்பட்டு  இறந்தார். லூசியின் தாயின் நண்பர்கள் அடிமைகளை விடுவிப்பதற்குப் பதிலாக அவர்களை விற்குமாறு அறிவுறுத்தினர். ஓர் அடிமையை விற்பதற்கு முன்பு, பணம் சம்பாதிப்பதற்காகப் பாத்திரங்கள் கழுவுவதை வேலையாக எடுத்துக்கொள்வேன் என்று மரியா பதிலளித்தார். அந்த அளவுக்கு லூசியின் குடும்பமே ஆப்பிரிக்கர்களைச் சமமாக நடத்தியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!