Home » புத்தகங்களின் காதலி
கிச்சன் கேபினட்

புத்தகங்களின் காதலி

லூக்ரிஷியா ருடால்ஃப்

லூக்ரிஷியா ருடால்ஃப்

பிணியுடனும் வலியுடனும் படுக்கையில் உழன்ற சிறுமியின் கதை இது. காய்ச்சலும் மூச்சடைப்பும் ஒவ்வொரு குளிர்காலத்திலும் அவளை வாட்டி வதைத்தன. வெளியே விளையாட முடியாது, ஓடித் திரிய முடியாது. ஒஹையோவின் குளிர் நிறைந்த அந்த ஊரில், அந்தச் சிறுமிக்குப் புத்தகங்கள் மட்டுமே நண்பர்கள்.

ஆனால் அப்படிப் படுக்கையில் கிடந்த சிறுமிதான் பிற்காலத்தில் அமெரிக்க அதிபரின் மனைவியாகி, வெள்ளை மாளிகையை ஆட்டிப் படைத்தாள். அவளுடைய கணவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது நாடே அழுதது. அவள் மட்டும் கலங்கவில்லை. அவள் பெயர் லூக்ரிஷியா ருடால்ஃப் ( Lucretia ‘Crete’ Rudolph). அனைவரும் அன்போடு அழைத்த பெயர் — ‘க்ரீட்’.

1832 ஏப்ரல் 19. ஒஹையோ மாநிலத்தின் கேரட்ஸ்வில் என்ற சிறிய ஊர். ஜெபுலோன் ருடால்ஃப் (Zeb Rudolph) என்ற தச்சர்-விவசாயியின் வீட்டில் லூக்ரிஷியா பிறந்தாள். தாய் அராபெல்லா (Arabella). நான்கு குழந்தைகளில் மூத்தவள் அவள். வீடு வசதியானதுதான், ஆனால் ஆடம்பரமில்லை. தந்தை ஜெபுலோன் ‘படிப்பே செல்வம்’ என்று நம்பியவர். அந்த நம்பிக்கை மகளிடம் ஆழமாக வேரூன்றியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!