ஜூலி
ஜூலி டென்ட் (பாக்ஸ்) கிராண்ட் (Julie Boggs Grant ) என்கிற முதல் பெண்மணி சாதாரணமானவர் அல்லர். புறத்தே அழகானவர் அல்லர். ஆனால் கணவர் இறந்த பதினைந்து வருடங்களுக்குப் பிறகும் அவர் அன்பின் ஒளியை உணர முடிந்த பெண்.
வெள்ளை ஹேவன் பிளாண்டேஷன் (White Haven plantation) என்ற இடத்தில் ஃப்ரெடரிக் டென்ட் (Frederick Dent) என்பவருக்கும், எலன் ரென்ஷல் டென்ட் (Ellen Wrenshall Dent) என்பவருக்கும் பிறந்தார் ஜூலியா டென்ட் பிறந்தபோதே இவருக்குக் கண்களில் குறைபாடு இருந்தது. இரண்டு கண்களாலும் நேர்கோட்டில் பார்க்க இயலாது. செல்வச் செழிப்பில் குறைவில்லாத குடும்பம். நல்ல மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்துவிடலாம் என்றபோது ஜூலியா மறுத்துவிட்டார்.
ஐந்து வயதில் கிராமர் பள்ளியில் படித்தார். ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான பள்ளி. பிறகு பெண்களுக்கான பள்ளியில் சேர்ந்து படித்தார். வார இறுதியில் மட்டுமே வீட்டுக்கு வருவார். அது செல்வந்தர்கள் படிக்கும் பள்ளி. இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.















Add Comment