ஜில் பைடன்
1977 ஜூன் 17 அன்று ஜோ பைடனை மணந்தபோது, ஜில்லுக்குத் தனது வாழ்க்கை எப்படியெல்லாம் மாறப்போகிறது எனத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நேரத்தில் ஜோ பைடன் ஒரு இளம் செனட்டர், ஜில் ஓர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். அவர்களின் பயணம் வெள்ளை மாளிகை வரை செல்லும் என்று இருவருக்குமே தெரியாது.
ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, கடும் உழைப்பையும் கல்வியையும் மட்டுமே நம்பி வாழ்க்கையில் முன்னேறப் போராடிய ஒரு பெண், எப்படி அமெரிக்காவின் முதல் பெண்மணியாக வரலாறு படைத்தார்?
ஜில் ட்ரேசி ஜேக்கப்ஸ், 1951 ஜூன் 3ஆம் தேதி நியூ ஜெர்சியின் ஹம்மண்டன் நகரில் பிறந்தார். ஐந்து சகோதரிகளில் மூத்தவரான ஜில், பென்சில்வேனியாவின் வில்லோ க்ரோவ் நகரில் வளர்ந்தார். சிசிலியிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய இத்தாலிய வம்சாவளி குடும்பத்தில் பிறந்த ஜில், குழந்தைப் பருவத்திலிருந்தே ஆங்கில மொழியில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார்.















Add Comment