Home » சிங்கப் பெண்ணே!
கிச்சன் கேபினட்

சிங்கப் பெண்ணே!

எலெனார் ரோசலின் ஸ்மித்

ரோசலின்

எலெனார் ரோசலின் ஸ்மித், 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஜார்ஜியாவின் சிறிய நகரமான பிளைன்ஸில் பிறந்தார். அவரது தாயார் அல்லிதியா ‘அல்லி’ முர்ரே ஸ்மித், தந்தை வில்பர்ன் எட்கர் ஸ்மித். நான்கு குழந்தைகளில் மூத்தவர் ரோசலின். ஒரு கட்டடக் கலைஞராக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது.

ரோசலினுக்கு 13 வயதாக இருந்தபோது, அவரது தந்தை ரத்தப் புற்றுநோயால் மரணமடைந்தார். அதன்பின் தனது தாயாருக்கு உதவி செய்வதும், இளைய சகோதரச் சகோதரிகளை வளர்ப்பதும் அவரது முக்கிய பொறுப்பாக மாறியது. தாயாரின் தையல் தொழிலிலும் உதவி செய்தார்.

சிறந்த மாணவியாக விளங்கிய ரோசலின், பிளைன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று 1944இல் பட்டம் பெற்றார். பின்னர் ஜார்ஜியா சவுத்வெஸ்டர்ன் கல்லூரியில் சேர்ந்து 1946இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போது வகுப்பின் துணைத் தலைவராகவும், யங் டெமாக்ராட்ஸ், கேம்பஸ் மார்ஷல் மற்றும் டம்ப்லிங் கிளப்களின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார்.

ரோசலின் தனது குழந்தைப் பருவத் தோழி ரூத் கார்ட்டரின் வீட்டில் அடிக்கடி நேரத்தைக் கழித்தார். ரூத்தின் அண்ணன் ஜிம்மி கார்ட்டரின் கடற்படை சீருடையில் புகைப்படத்தைப் பார்த்து ரோசலின் காதல் கொண்டார். 1945இல் ஜிம்மி கார்ட்டர் அமெரிக்கக் கடற்படை அகாடமியிலிருந்து விடுமுறையில் வீடு திரும்பியபோது அவர்களது முதல் சந்திப்பு நடந்தது. அப்போது ரோசலினுக்கு 17 வயது, ஜிம்மிக்கு 20.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!