Home » வீட்டுக்குள் நாடோடி
ஆண்டறிக்கை

வீட்டுக்குள் நாடோடி

கோகிலா

பதிமூன்று நாள்களில் ஒரு புத்தகத்தை எழுதி முடித்து வெற்றிகரமாக இந்த ஆண்டை நிறைவு செய்தேன். நான் எழுதுவதற்கென்றே என் வீட்டில் ஓர் அறையை அபகரித்துள்ளேன். மினிமலிசக் கொள்கையோடு திட்டமிட்ட ஆண்டு என்பதால் வெற்றிப் பட்டியல் நீளம் குறைவுதான், ஆனால் நிறைவானது.

இரண்டு புனைவற்ற புத்தகங்கள் எழுதுவது. நாவல், குறுநாவல், நெடுங்கதை என ஏதோ ஒரு புனைவு எழுத முயற்சி செய்வது. இவைதாம் என் இலக்குகளாக இருந்தன. மெட்ராஸ் பேப்பர் துணை ஆசிரியராகக் கணிசமான நேரம் செலவிடுகையில் நிறைய இலக்குகளை வைத்துக்கொள்ள அஞ்சினேன். ஆனால் உண்மை வேறு. எனக்குச் சொல்லப்படாத வேலைகளிலும் தலையைக் கொடுத்து, தனிப்பட்ட முறையில் நான் எழுதுவதற்குச் சரியாக நேரம் கொடுக்காமல் இருந்தேன். அது எழுத்தின் தரத்தில் பிரதிபலித்ததில் பதற்றமாகி எழுவதையே குறைக்கத் தொடங்கினேன். வேலை பிரச்சனையில்லை வழக்கம்போல நானேதான் பிரச்சனை என்பது புரிந்தது.

முறையாகத் திட்டமிட்டுச் சரி செய்ய முயன்றேன். ஒருகட்டத்தில் அந்த முயற்சியை நிறுத்தி வேலையைக் கைவிடுவதென முடிவெடுத்தேன். அடுத்த மூன்று மாதங்கள் மட்டுமே வேலை செய்வேன் என்று ஆசிரியருக்கு அறிவித்தேன். அதன் பிறகே நண்பர்களிடம் தெரிவித்தேன். தவறான முடிவென்றே பலரும் கருதினர். துணை ஆசிரியர் பணி, நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும், பல்வேறு விதமான அனுபவங்களையும் கொடுத்தது. அங்கீகாரத்தையும்தான். ஆனாலும் நிறைய யோசித்தே முடிவெடுத்திருந்தேன். துணிந்தபின் எண்ணுவம் என்பது எனக்குப் பழக்கமில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!