கோவேறு கழுதைகள்
“இது ரொம்ப ஈஸிடா” என வினோத் சொன்னதை ரவியால் நம்ப முடியவில்லை.
“எதடா ஈஸின்ற? நம்ம லைஃப்ல ஈஸியான மேட்டர்லாம் இருக்கா என்ன?” எனக் கேட்டான் ரவி.
ஆறு மாதங்களாக வினோத்தும் ரவியும் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். கேம்பஸ் இண்டர்வ்யூவில் இருவருக்குமே வேலை கிடைக்கவில்லை. ஏ.ஐ. எழுதிக் கொடுத்த பயோடேட்டாவை வைத்துக் கொண்டு நாலாபுறமும் சுற்றிச் சுற்றி வருகின்றனர். பலனொன்றுமில்லை. ஒன்றிரண்டு இண்டர்வ்யூக்கள் வந்தன. ஆனால் அவர்கள் சொன்ன பதில்கள் பயோடேட்டா தரத்தில் இல்லை. எப்படியிருக்கும்? பயோடேட்டா எழுதிக் கொடுத்த ஏ.ஐ.யை இண்டர்வ்யூவிற்குக் கூட்டிச் செல்ல முடியாதல்லவா..?
நிலைமை இவ்வாறிருக்க இவன் எதை ஈஸி என்கிறான் என்பதுதான் ரவியின் வியப்பிற்குக் காரணம்.
“நான் ஒரு ஸ்கீம்ல ஜாய்ன் பண்ணியிருக்கேன்டா. அதத் தான் ஈஸின்றேன்” வினோத் சொன்னான்.
“என்ன ஸ்கீம்டா?”
“இது ஒரு பார்ட் டைம் ஜாப் மாதிரி” என்றான் வினோத்.
“கன்ஃப்யூஸ் பண்ணாம க்ளியரா சொல்லுடா”.
“நான் மொதவே சொன்ன மாதிரி ரொம்ப சிம்பிளான வேல தான்டா. இந்த ஜாப் பேரு ரிமோட் ஃபைனான்ஸ் ப்ராசஸர்.”
“அப்டின்னா?” ரவி குறுக்கிட்டான்.
“நம்மளோட பேங்க் அக்கவுண்ட்டுக்குக் காசு வரும். அமவுண்ட், டேட், நேரம்லாம் ஒரு டேட்டாபேஸ்ல எண்ட்ரி போடனும். வந்த காச நமக்குக் குடுத்துருக்க இன்ஸ்ட்ரக்ஷன்படி வேறசில அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணனும். அவ்வளவுதான்” எனக் கடகடவெனச் சொல்லி முடித்தான் வினோத்.
Add Comment