மேட்ரிமோனி மாப்பிள்ளை
ஐந்தாவது ப்ளாட்ஃபார்மில் அன்றைக்கு அவ்வளவாய்க் கூட்டமில்லை. ப்ளாட்ஃபார்மை மின்விளக்குகள் பிரகாசமாக்கியிருந்தன. சற்றுமுன் மறைந்த சூரியன் விட்டுச் சென்ற மங்கலான ஒளி தண்டவாளப் பள்ளத்தில். இருளும் ஒளியும் ஒரே நேர்கோட்டில். அருகருகே. அந்த ரயில் நிலையச் சூழல் ரம்மியமாய் ஒரு சுவரோவியம் போல இருந்தது.
“என்னங்க யாரையுமே காணோம்? இங்க தான…?” தன் கணவரிடம் கேட்டாள் கமலா.
“இங்கதான்னு நெனெக்கிறேன்” வழக்கம்போலக் குழப்பமாகப் பதில் சொன்ன கணவனை முறைத்தாள் கமலா. தியாகராஜன் அப்படித் தான். அரசுப் பள்ளியில் க்ளார்க் உத்தியோகம். அதுதான் அவரது ஒரே அடையாளம். அடுத்த வருடத்துடன் அதுவுமில்லை. அதைப்பற்றியெல்லாம் அவருக்குப் பெரிதாக வருத்தமில்லை.
“எதையுமே தெளிவாக் கேட்டுக்க மாட்டீங்களா…?” கமலா கேட்ட கேள்விக்குச் சம்பந்தமே இல்லாமல், “இரு… கொஞ்ச நேரம் இங்க உக்காருவோம்” என்றார் தியாகராஜன்.
Add Comment