ஒன்று ஒன்பது மூன்று பூஜ்ஜியம்
பரத்பூர், மதுரா, நூஹ், த்யோகர், ஜம்தாரா, குருக்ராம், அல்வார், பொக்காரோ, கர்மாடண்ட் மற்றும் கிரிதிஹ், இவையாவும் வடஇந்தியச் சுற்றுலாத் தலங்கள் என்றெண்ணி விடாதீர்கள். இந்தியாவெங்கும் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களில் பெரும்பகுதி இந்தப் பத்து இடங்களில் ஏதோ ஒன்றிலிருந்து தான் தொடங்குவதாகத் தெரிவிக்கிறது ஓர் ஆய்வறிக்கை.
கூகுளில் “ஜம்தாரா சைபர் க்ரைம்” என்று தட்டிப்பாருங்கள். சைபர் குற்றங்கள் கிட்டத்தட்ட குடிசைத் தொழில்போல நிகழ்த்தப்படுகின்றன. இந்த ஊரை வைத்துத் திரைப்படங்கள், வெப்சீரீஸ்கள் எல்லாம் எடுத்திருக்கின்றனர். இப்போது ஜம்தாராவையும் ஓவர்டேக் செய்யுமளவு போட்டி போட்டுச் சைபர் க்ரைம்கள் பெருகிவருகின்றன.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் சந்திக்கும் நவீனப் பிரச்னைகளில் மிகமுக்கியமானது சைபர் தாக்குதல். தனிநபர்கள் முதல் அரசாங்கங்கள்வரை அனைவருமே எளிதாகச் சைபர் தாக்குதலுக்கு இலக்காகிவிடுகின்றனர்.
Add Comment