மனம். மந்திரம். மேப்.
குட்டிச்சாத்தானுக்கு எழுதவும் பேசவும் மட்டும்தான் தெரியுமா? சில நேரங்களில் நமக்கு டெக்ஸ்ட் தவிர வேறு சில வடிவங்களில் பதில்கள் தேவைப்படுமல்லவா? அச்சூழல்களில் குட்டிச்சாத்தானைப் பயன்படுத்த முடியாதா?
கட்டாயம் பயன்படுத்தலாம். அப்படியொரு சினாரியோவைத்தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
க்ளாட், ஜெமினி போன்றவை அடிப்படையில் மொழிமாதிரிகள். சொற்கள்தாம் இவற்றின் பலம். “அப்ப படம் வராதா?” என்றால் வரும். படம் மட்டுமல்ல. பல்வேறு விதங்களில் இவற்றிலிருந்து அவுட்புட்களைப் பெறலாம்.
சில உத்திகளின் மூலம் குட்டிச்சாத்தான்களை வசியம் செய்ய இயலும். டெக்ஸ்ட் அல்லாத பிற வடிவங்களை உருவாக்க முடியும். அவ்வாறான ஒரு வடிவத்தை இந்த அத்தியாயத்தில் தெரிந்துகொள்வோம்.
மைண்ட் மேப் என்றொன்று இருக்கிறது. கூகுள் மேப் தெரியும்… அதென்ன மைண்ட்மேப்?
Add Comment