எஜமான் காலடி மண்ணெடுத்து…
கணினி ஒரு வேலையாள். இயக்குபவர் தான் அதன் எஜமானன். வேலையாளின் மொழியை எஜமானர்கள் கற்பதில்லை. ஆனால் கணினியைப் பொறுத்தவரை அவ்வாறு தான் நிகழ்ந்தது. எஜமானர்களாகிய நாம், பணியாளாகிய கணினியின் மொழியைக் கற்கவேண்டிய சூழல் வந்தது. பெரிதும் முனைந்து நாமும் கற்றோம்.
சென்ற அத்தியாயத்தில் “டாஸ் ப்ராம்ப்ட்” பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில கட்டளைகள். கணினியுடன் உரையாட இக்கட்டளைகளை நாம் கற்றோம். இவை ஆதிகால கம்ப்யூட்டர்கள். அங்கிருந்து கணினிகள் பரிணாம வளர்ச்சியடைந்து வெகுவாக வளர்ந்துவிட்டன.
கணினிகள் மனித மொழி கற்றக்தொடங்கின. எஜமானர்களின் வசதி தானே என்றைக்குமே முக்கியம். அலெக்ஸா, ஸீரீ என எண்ணற்ற அசிஸ்டன்ட்கள் வந்துவிட்டன. ப்ராம்ப்ட் எஞ்சினியரிங் பற்றித் தெரிந்துகொள்ள, கணினிகள் மனித மொழிகளை எவ்வாறு கையாள்கின்றன எனத் தெரிந்துகொள்வது அவசியம்.
Add Comment