தூரிகை
ஓர் ஓவியம் ஆயிரம் சொற்களுக்கு ஈடானது. எழுத்தினும் முந்தியது ஓவியம். ஆதிமனிதர்களின் குகை ஓவியங்கள் உலகெங்கும் விரவிக்கிடக்கின்றன. கல் தோன்றி… கள் தோன்றாக் காலத்தே முன் தோன்றியவை இவ்வோவியங்கள்.
“இப்ப ஏன் ஆர்ட் க்ளாஸ்…?” இந்த வாரம் ஓவிய வாரம். வரையப் பழகப் போகிறோம். சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள். சற்றே மாற்றிக்கொள்வோம். சித்திரமும் ப்ராம்ப்ட் பழக்கம்.
குட்டிச்சாத்தானிடம் வேலை வாங்குவது பற்றித் தொடர்ந்து பார்த்துவருகிறோம். வெவ்வேறுவிதமான வேலைகள். அவ்வரிசையில் இன்று குட்டிச்சாத்தான் மூலம் படம் காட்டுவது எவ்வாறென்று அறிந்து கொள்வோம்.
ஓவியம் ஒரு நுண்கலை. முழுக்கவனத்துடன் செய்யவேண்டிய ஒன்று. ஓவியத்திற்கான ப்ராம்ப்ட் எழுதுவதும் மிக நுட்பமானது. இதற்கெனவே தனியாக ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கான சங்கதிகள் கொண்டது. இவற்றுள் முதன்மையான, கட்டாயம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய சிலவற்றைப் பார்ப்போம்.
Add Comment