சங்கிலிக் கருப்பன் துணை
ஒரு ப்ராம்ப்ட் தருகிறோம். ஏஐ அதற்கான மறுவினையாற்றுகிறது. அது ஒரு தகவலாக இருக்கலாம். சென்ற அத்தியாயத்தில் பார்த்தது போல ஒரு படமாகவும் வரலாம். நாம் கொடுத்திருக்கும் கட்டளை எளிதானதென்றால் இத்தோடு மேட்டர் ஓவர். கையில காசு வாயில தோச என்பது போல.
பெரும்பாலான நேரங்களில் இவ்வாறிருப்பதில்லை. சிக்கலான பணியைக் குட்டிச்சாத்தானிடம் கொடுக்கும்போது “ப்ராம்ப்ட் – பதில் – சுபம்” என்று முடியாது. நாமொன்று கேட்போம். அதுவொன்றைச் செய்து வைக்கும்.
இவ்வாறு நிகழும்போது உடனே அலுத்துக்கொள்ளக் கூடாது. உன்ன எல்லாம் வச்சுக்கிட்டு ஒரு கொலை கூட பண்ண முடியாது என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. இது போன்ற இடங்களில் ரௌத்ரம் பழகாமல் இருப்பதே நலம். குணமாகச்சொல்லிப் புரியவைக்க வேண்டும். அதற்கான ஒரு சூத்திரத்தை இந்த அத்தியாயத்தில் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.
Add Comment