Home » குட்டிச்சாத்தான் வசியக் கலை – 23
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச்சாத்தான் வசியக் கலை – 23

ஏஐ மனசு

நல்வாழ்வு உடல் மட்டுமே சார்ந்ததல்ல. மனம் அதன் முக்கியமான அங்கம். மனநலம் என்பது இன்று உலகம் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னை. சிறுவர் முதல் முதியோர் வரை வயது வேறுபாடின்றி அனைவரையும் இது பாதிக்கிறது.

எங்கும் நிறைந்துவரும் ஏஐ இத்துறையை மட்டும் விட்டுவைக்குமா? மனநல ஆலோசகர்களும் ஏஐ குறித்து ஆராயத் தொடங்கியுள்ளனர். மனநலம் என்று ஒற்றைச் சொல்லால் குறிப்பிட்டுவிடுகிறோம். அச்சொல் தன்னுள் ஓர் உலகையே அடக்கிவைத்திருக்கிறது.

மனித உடலே நாமறிந்த கருவிகளில் மிகவும் சிக்கலானது. உடலினும் நுணுக்கமானது மனம். கோவிட் பெருந்தொற்றுக் காலம் மனநலம் சார்ந்த விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளது.

ஓர் உளவியல் மருத்துவரைச் சென்று சந்திப்பதையே அவமானமாகக் கருதிய காலம் ஒன்றிருந்தது. இன்று அவ்வெண்ணம் முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. பெருமளவு குறைந்துள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்