ப்ராம்ப்ட்டும் பஞ்சபூதங்களும்
“ஓர் அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியராக மாணவர்களுக்கு இலக்கணம் கற்பிக்க வேண்டும். இது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கானது, அவர்களுக்கு அடிப்படை இலக்கணம் மட்டுமே தெரியும். வினா-விடை முறையில் எளிய உதாரணங்களுடன் விளக்கவும். அன்பான, ஊக்கமளிக்கும் தொனியில் விளக்கவும்.”
இது ஒரு ப்ராம்ப்ட். உற்றுக் கவனித்தால் இந்த ப்ராம்ப்ட்டில் ஓர் ஒழுங்கு இருப்பதை உணரலாம். இதை டீகோட் செய்வதன் மூலம் நாம் ப்ராம்ப்ட் கலையின் பஞ்சதந்திரங்களைத் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.
ப்ராம்ப்ட்டில் பல்வேறு பாகங்கள் உள்ளன. அவற்றைச் சரியாக அமைப்பது மிகவும் அவசியம். நாம் ஏ.ஐயிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறோம். அவ்வண்ணமே ஏ.ஐ செய்து முடிக்க வேண்டுமென்றால் ப்ராம்ப்டின் பல்வேறு பாகங்களையும் பக்குவமாகக் கொடுக்க வேண்டும். “சுமார்” ப்ராம்ப்ட்டில் இருந்து “சூப்பர்” ப்ராம்ப்ட்டிற்கு முன்னேற வேண்டுமானால் இப்பாகங்கள் குறித்து அறிந்துகொள்வது இன்றியமையாதது.
Add Comment