குட்டிச்சாத்தான் குரளி(லி) வித்தை
குட்டிச்சாத்தானுக்குக் குரல் உள்ளது. ஆம். சில குட்டிச்சாத்தான்களால் பேசவும் இயலும். சராசரி மனிதர்களைப் போலவே அதனுடன் உரையாடலாம். இது “வாய்ஸ் மோட்” என அழைக்கப்படுகிறது.
முதலில் பேச்சு வந்த குட்டிச்சாத்தான் சாட்ஜிபிடி. ஆரம்பத்தில் “இது ஒரு மாதிரி செயற்கையா இருக்கே…” என்றார்கள். இவற்றால் மனிதர்களைப் போலப் பேசவே இயலாது என்றார்கள்.
தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் இது போன்ற விமர்சனங்கள் ஒன்றும் புதிதல்ல. நம் உலகையே புரட்டிப்போட்ட தொழில்நுட்பங்களுக்கே கூட இந்நிலை வந்துள்ளது.
ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.
பறவைகளைப் போலப் பறக்கவேண்டும் என்பது மனிதர்களின் கனவு. பல்லாயிரம் ஆண்டுகளாக இயலவில்லை. தொடர்ந்து முயன்றார்கள். கோமாளித்தனமான முயற்சிகளெல்லாம் செய்திருக்கிறார்கள்.
Add Comment