15. டெல்லி தர்பார்
லீடர் பத்திரிகையில் வெளியான கட்டுரையால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசாங்கம், “இனியும் இதேபோன்ற அரசுக்கு எதிரான விமர்சனப் போக்கு தொடருமானால், நீங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என எச்சரிக்கைக் கடிதம் அனுப்ப, இதனை எப்படிக் கையாள்வது என்று மோதிலால் நேருவுக்குக் குழப்பமாக இருந்தது.
சர் எட்வர்டு கர்சான், சர் ஹோரிஸ் ஏவெரி என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு வழக்கறிஞர்களைக் கலந்து ஆலோசித்தார். அவர்கள் இருவரும் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையைப் படித்துப் பார்த்துவிட்டு, “இந்தக் கட்டுரையில் தேசத்துரோகமான கருத்துக்கள் எதுவுமில்லை” என்று ஒரு சான்றிதழ் அளித்தார்கள்.
மோதிலால் நேரு, அரசாங்கத்துக்கு ஒரு விளக்கக் கடிதம் எழுதி, அந்தச் சான்றிதழையும் இணைத்து, அனுப்பி வைத்தார். மோதிலால் நேருவின் விளக்கத்தால் திருப்தி அடைந்து விஷயம் முடிவுக்கு வந்தது.
Add Comment