Home » ஒரு குடும்பக் கதை – 13
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 13

மார்லி-மிண்டொ

14. கறிக்கு உதவாத காய்

இம்பீரியல் சிவில் சர்வீஸ் (ஐ.சி.எஸ்) என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களால் வியந்து பார்க்கப்பட்ட ஒரு ஆட்சிப் பணி வாய்ப்பு. இங்கிலாந்து சென்று படிக்கும் இந்திய மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு ஐ.சி.எஸ். தேர்வு எழுதுவார்கள்; அல்லது சட்டம் படித்துவிட்டு, சொந்தமாகத் தொழிலில் இறங்குவார்கள். மோதிலால் நேருவும், தன் மகன் ஐ.சி.எஸ். பரீட்சைக்குத் தயாராக வேண்டும் என்றுதான் நினைத்தார்.

ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்து மூன்றில் தான் இந்தியர்களும் ஐ.சி.எஸ். தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், அதிலிருந்து பத்தாண்டுகள் கழித்தே அதாவது 1863 ஆம் வருடம்தான் முதல்முறையாக ஓர் இந்திய மாணவர் ஐ.சி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவர் பெயர் சத்யேந்திரநாத் தாகூர். நோபல் பரிசுபெற்ற வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் மூத்த சகோதரர். 1869 ஆம் ஆண்டில் நான்கு இந்திய மாணவர்கள் ஐ.சி.எஸ்.தேர்வில் வெற்றி பெற்றார்கள். ரமேஷ் சந்திர தத், சுரேந்திரநாத் பானர்ஜி, பிஹாரி லால் குப்தா, எஸ்.பி.தாகூர் என்ற அந்த நான்கு பேரும் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பியபோது, கல்கத்தாவின் ஹௌரா ரயில் நிலையத்தில் அவர்களுக்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!