கருங்கல் பாறை போன்று இறுகிய முகத்துடன் வடகொரிய அதிபர் கிம் ஜோ உன் அந்தப் பிரமாண்டமான ஹாலுக்கு வந்து கொண்டிருந்தார். கூட்டம் எழுந்து நின்று வேகவேகமாய் கைதட்டத் தொடங்கியது. கிம் தன் ஆசனத்திற்கு வந்து பார்வையால் கும்பலைக் கழுவியவாறு பேசத் தொடங்கினார். ஜெனரல்கள், பிரிகேடியர்கள், கேணல்கள் என்று அவரவர் தராதரத்திற்கேற்ப விதவிதமான பதக்கங்களுடன் ராணுவ உடைகள் தரித்திருந்தார்கள். பாதிப் பேரின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. உலக சரித்திரத்தில் இத்தனை நீண்ட கைதட்டலைப் பெறும் ஒரே ஆத்மா அதிபர் கிம்மாகத்தான் இருக்க வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
Add Comment