அது திருமலை நாயக்க மன்னர் வாழ்வின் இறுதிக் காலக்கட்டம் . மதுரையில் சைவ வைணவ சாதிப் போராட்டங்கள் ஒரு புறமும், மத போராட்டங்கள் மற்றொரு புறமும் தீவிரமாக இருந்தன. போராட்டங்கள் தொடர்ந்தால் நாட்டின் வளர்ச்சி தடைப்படும் என்ற அச்சம் நாயக்கர் மனத்தில் இருந்தது. ஆட்சி பலவீனமாக மாறும்படி விடக்கூடாது என்று யோசித்த மன்னர் ஒரு நாள் அமைச்சரவையைக் கூட்டினார். “அமைச்சர்களே! சாதிமதப் போராட்டங்கள் நாட்டிற்கு மிகப் பெரிய சீர்குலைவை ஏற்படுத்தும். நெருக்கடியை உருவாக்கும்.. பிரச்சனையைச் சரி செய்ய வழி சொல்லுங்கள்.” என்றார்.
அப்போது அமைச்சர்கள் அனைவரும் சொன்ன ஒரு விஷயம் – ‘திருவிழா’. திருவிழா என்றால் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் கலந்து கொள்ளும் சாதாரணத் திருவிழா அல்ல. அனைத்துச் சாதி மதத்தைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்ளும் பெருவிழா. பல சமய மக்கள் ஒன்று சேர்ந்து திருவிழாக் கொண்டாடும் போது நல்லுறவு வளரும். மதநல்லிணக்கத்தைக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தார்கள்.
Add Comment