Home » சிவாஜிக்கு வந்த சோதனை
இந்தியா

சிவாஜிக்கு வந்த சோதனை

நாட்டின் பிரதமர் மன்னிப்பு கேட்கிறார். மாநிலத் தலைவர்களும் மன்னிப்பு கேட்கிறார்கள். விரைந்து நடவடிக்கை எடுப்போம், உரிய தண்டனை கொடுப்போம் என்றெல்லாம் சொல்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் வரப்போகிறது. எனவே தேர்தலையொட்டியாவது மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதே என்று நினைத்தால் அது தவறு. இதெல்லாம் சிவாஜி விழுந்ததை ஒட்டி வெளியான சூளுரைகள்.

சிலை வைத்தபோது, “முப்பத்து ஐந்து அடி உயரத்தில் ஓங்கி நிற்கும் இந்தச் சிலை இருநூறு ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும். நூற்று ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் எந்தவிதமான சேதமும் நிகழ வாய்ப்பில்லை. இது மாநிலத்தின் மிக முக்கியமான அடையாளமாக மாறும்” என்று உத்தரவாதம் வழங்கப்பட்டது. திறப்பு விழா நடந்து 267-ஆவது நாள்… நல்ல மழை, நாற்பத்து ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் காற்று. மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய அடையாளமாகப் புகழப்பட்ட மராட்டிய மன்னர் வீர சிவாஜியின் சிலை உடைந்து விழுந்து சுக்கு நூறானது.

தேர்தல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மகாராஷ்டிர மாநிலத்துக்குச் சிவாஜி முக்கியமான சின்னம். “மராட்டிய அரசர் சிவாஜி, அடிமைத்தனத்தை உடைத்து நாட்டைக் காத்த வீரர். அவர் மகாராஷ்டிராவிற்கு மட்டும் சொந்தமானவரல்ல. அவரது புகழ் ஒரு மாநிலத்தோடு மட்டும் நின்று விடக் கூடாது என்பதுதான் பாஜகவின் ஆசை. இவரது புகழ் இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பரவ வேண்டும். மொரிஷியஸ் நாட்டிலும் சிவாஜி சிலை திறக்கப் பாஜக முயற்சி செய்யும்” என்று சிலை திறந்தபோது முழங்கினார் பிரதமர் மோடி. நிறுவிய சிலை இயற்கைச் சீற்றத்தால் வீழ்ந்துவிட்டது. “இந்த நிகழ்வு மிகத் துரதிர்ஷ்டமானது. என்னைப் பொறுத்தவரை அவர் அரசர் மட்டுமல்ல. அவரது சிலை தெய்வத்தின் திருவுருவச் சிலைக்கு ஒப்பானது. நடந்த சம்பவத்திற்குத் தலை தாழ்த்தி மன்னிப்பு கோருகிறேன்” என்கிறார் இப்பொழுது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்