தடுப்பூசி போட்டால் வராமல் தடுக்கக்கூடிய நோய் தாக்கி, அமெரிக்காவில் மூன்று பேர் இறந்துபோயிருக்கிறார்கள். அதில் இரண்டு குழந்தைகளும் அடக்கம். அமெரிக்காவில் முற்றிலுமாக நீக்கப்பட்ட ஒரு நோய் இது. பல ஏழை நாடுகளில் உணவுக்கே அல்லல்படும் மக்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள இயலாததால், இந்த நோய் பரவுகிறது. ஆனால், தடுப்பூசி இலவசமாகக் கொடுக்கப்படும் அமெரிக்காவிலும் தற்போது 234 பேருக்கு வந்திருக்கிறது.
டெக்ஸாஸ், நியூ மெக்ஸிகோ, கெண்டகி, நியூஜெர்சி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் தட்டம்மை பரவியிருக்கிறது. வைரஸ் காய்ச்சலால் வரும் நோய் இது. தாளம்மை (mumps), தட்டம்மை (measles), ரூபெல்லா என்ற மூன்றையும் தடுக்கக் கூடிய MMR என்ற தடுப்பூசியின் விலையும் அதிகம் இல்லை. அமெரிக்காவில் காப்பீடுகள் இதற்கான செலவை ஏற்றுக்கொள்கின்றன. குழந்தைகளுக்கு 12 மாதமாகும் போது ஒரு முறையும் அதன் பின் 28 நாட்கள் கழித்து இன்னொரு முறையும் போட்டால் போதும். ஆயுள்கால நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகும்.
அப்படி என்றால் பல தலைமுறைகளாக ஒழிக்கப்பட்டு இருந்த தட்டம்மை, ஏன் பல நாடுகளில் இப்போது மீண்டும் இந்தத் தட்டம்மை நோய் பரவுகிறது? கொஞ்சம் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போம்.
Add Comment