நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மிகப் பெரியளவில் ஊழல்களும் முறைகேடுகளும் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருப்பதை மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) கண்டுபிடித்துள்ளது. இதில் உயரதிகாரிகள், கல்வியாளர்கள், இடைத்தரகர்கள் உள்படப் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். வடஇந்தியாவைச் சேர்ந்த பிரபல சாமியார் ஒருவரும் இதில் சிக்கியுள்ளார். இதுவரை முப்பத்து நான்கு பேர் மீது தேசியப் புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியிருக்கிறது.
இந்தியாவில் தற்போது எழுநூற்று எண்பது மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் தனியார், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை முந்நூற்று ஐம்பது. இவற்றில் மட்டும் சுமார் ஐம்பதாயிரம் இருக்கைகள் உள்ளன. முப்பத்தைந்து ஆண்டுகள் முன்பு வரை மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன.1992ஆம் ஆண்டு தனியார்மயக் கொள்கை ஏற்படுத்தப்பட்ட பிறகு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவர்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு தனியார்களுக்கு மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் வழங்கப்பட்டது.















Add Comment