டிரம்ப், ஜனநாயகக் கட்சி ஆளும் மாநிலங்களில் சட்டவிரோதமாக உள்ள மக்களை அகற்றுகிறேன் என்று அங்கே தேசியப் பாதுகாப்பு வீரர்களை அனுப்பி இருக்கிறார். நாட்டில் ஏதேனும் இயற்கைப் பேரழிவு நேரிடும்போது மக்களைக் காக்க இந்தப் பாதுகாப்பு வீரர்கள் செல்வது சரி. ஆனால் உள்ளூர் மக்களை ரப்பர் குண்டுகளால் தாக்குவது எப்படிச் சரியாகும்?
அது போலத்தான், நம் உடலில் வைரஸ்களும் பாக்டீரியாக்களும் உள்நுழையும்போது டி செல் ( T cell), பி செல் (B cell) இரண்டும் உற்பத்தி செய்யும் ஆன்டிபாடிகள் ஒரு ராணுவத்தை உருவாக்கி அவற்றுக்கு எதிராகத் தாக்குதல் நிகழ்த்தி நம்மைக் காக்கும்.ஆனால் சில நேரங்களில் இந்தக் காவலர்கள் நம் உடலின் சொந்த செல்களையே தாக்குகின்றன. இதனால்தான் வகை 1 நீரிழிவு, முடக்குவாதம் போன்ற நோய்கள் வருகின்றன.
ஆனால் இது ஏன் சிலருக்கு மட்டும் நடக்கிறது? இது பல ஆண்டுகளாக விடை கிடைக்காத கேள்வியாக இருந்தது.















Add Comment