நமது சமூக ஊடகங்கள் இன்றைக்கு நைட்டி குறித்த ஆராய்ச்சியில் மூழ்கியிருக்கிறது. ஒரு மாறுதலுக்கு நாம் மினி ஸ்கர்ட்டைக் குறித்துச் சிறிது தெரிந்துகொள்வோம்.
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப்புரட்சி, பழுப்புப்புரட்சி போன்ற புரட்சிகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது உணவு, பால், கடல் உணவு, காபி – கோகோ போன்ற அத்தியாவசியத்தின் உற்பத்தியில் தன்னிறைவடைவது. அந்த வரிசையில் மினி ஸ்கர்ட் புரட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் புரட்சி லண்டனில் நடந்து உலகெங்கும் பரவியது. அதைச் செய்தவர் மேரி குவாண்ட். மினி ஸ்கர்ட்டிற்கு பெருமை சேர்த்த ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவர் இவர்.
Add Comment