Home » மாடர்ன் மசால் வடை
உணவு

மாடர்ன் மசால் வடை

தோசை மாவு புளித்துப் போனால் பணியாரமாக சுட்டுக் கொள்ளலாம். அடைமாவில் குணுக்கு போடலாம். வாங்கிய பிரட் மிச்சமாகி விட்டதென்றால்? அதை அப்படியே பாலில் தோய்த்துத் தின்னலாம்தான். ஆனால் அடியிலும் நுனியியிலும் பிரவுனாக இருக்கும் பிரட்டைப் பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. அதையும் வீணாக்காமல் தூளாக்கி ஒரு மொறுமொறு வடையை எளிதாகச் செய்யலாம்.

தமிழ் நாட்டின் பாரம்பரிய சிறு தீனி வடை. பட்டுப் போன்ற மெது வடை, கமகமக்கும் மசால் வடை, கரகர பருப்பு வடை, தவளை வடை, ஆஞ்சநேயருக்கு சாத்தும் கடிக்க முடியா வடை என வடையில் ஓராயிரம் வகைகள் உண்டு. எந்த வடை செய்ய வேண்டுமென்றாலும் முதலில் பருப்பை ஊற வைத்துக் காத்திருக்க வேண்டுமல்லவா?. பிரட் வடைக்கு இந்த ஊற வைக்கும் விவகாரமெல்லாம் தேவை இல்லை. இன்ஸ்டன்ட்டாகச் செய்து விடலாம்.

ஒரு விடுமுறை மாலை. வாசலில் லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. ‘பஜ்ஜி பக்கோடாவெல்லாம் அடிக்கடிப் போடறதுதானே… ஒரு மாறுதலுக்கு பிரட் வடை செய்வோமா?’ என்றார் அத்தாட்டி. பிரட்டை சாண்ட்விச் செய்து, ஜாம் தடவித் தின்று எனக்கும் அலுத்துப் போயிருந்தது. உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!