Home » மொஜ்தபா கமெனி: நெருக்கடி நேரத்துத் தலைவர்
ஆளுமை

மொஜ்தபா கமெனி: நெருக்கடி நேரத்துத் தலைவர்

மொஜ்தபா கமேனி

இரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமெனி, 2026 பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டார். அவருடைய முப்பத்தாறு ஆண்டுகாலத் தனிப்பெரும் ஆட்சி ஒரே நாளில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இரானின் அடுத்த உச்சத் தலைவர் யார் என்பதை அறிய உலகமே‌ காத்திருந்தது.

பொதுவாக உச்சத் தலைவரின் கட்டுப்பாட்டிலேயே அந்நாடும், நாட்டின் சக்திவாய்ந்த இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையும் இருந்து வருகின்றன. இதனால் அடுத்த உச்சத் தலைவரை உடனடியாகத் தேர்ந்தெடுக்கும் கட்டாயம் ஏற்பட்டது. தந்தை கொல்லப்பட்டு சரியாக எட்டு நாட்களில் மகன் மொஜ்தபா கமெனி ஈரானின் மூன்றாவது உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கு முன்னர் இரானின் அதிகாரிகளிடமிருந்து இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராமல் இருந்தது. ஆனால் இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய ஊடகங்கள், அயத்துல்லா அலி கமெனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமெனியே நாற்பத்தேழு ஆண்டு பழைமையான இஸ்லாமியக் குடியரசின் புதிய உச்சத் தலைவராவதற்கான முன்னணி வேட்பாளர் என்று தெரிவித்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!