Home » தீராத ‘விளையாட்டு’ப் பெண்
ஆளுமை

தீராத ‘விளையாட்டு’ப் பெண்

ஆஷா சர்மா

சுண்டு விரலை விடச் சிறியவர். ஆனால் வேகமாக நடப்பார், குதிப்பார், பறக்கவும் செய்வார். கட்டை மீசை, நீண்ட வட்ட மூக்கு. சிகப்புத் தொப்பியுடனும் பின்னணி இசையுடனும் வலம் வரும் சூப்பர் மாரியோவை அறியாத 90ஸ் கிட்ஸ் இருக்க முடியாது. அவர்களை வீட்டிலேயே கட்டிப்போட்ட முதல் வீடியோ கேம் சூப்பர் மாரியோவாகத்தான்இருக்க முடியும்.

இருபத்தைந்து வருடங்கள் கடந்துவிட்டன. சட்டைப் பையில் கைக்குட்டைக்குப் பதில் மொபைல் ஃபோன் வந்துவிட்டது. பல வீடுகளுக்கு ஒரு டிவி இருந்த காலம் மாறி, ஒரே வீட்டில் அறைக்கு ஒரு டிவி என்றாகிவிட்டது. இதெல்லாம் மாறியபின் கேமிங் மட்டும் என்ன சூப்பர் மாரியோவிலேயா இருக்கப்போகிறது?

வீடியோக்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் போல, கேமிங் உலகுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் Xbox என்று சொல்லலாம். ஒரு ஜாய் ஸ்டிக், கேமிங் கன்சோல் என்னும் சின்னப் பெட்டி. இவை மட்டும் இருந்தால் போதும். கேமிங்கே சரணாகதி என்று நம்மைக் கட்டிப்போடும் ஆயிரக்கணக்கான விளையாட்டுகள் உள்ளன. இதற்கு ஐம்பது கோடி மாதாந்திர சந்தாதாரர்கள் உள்ளனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!