இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது பீகார் மாநிலத்தில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது தகுதியான வாக்காளர்கள் மட்டும் வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் தங்களுக்கு வேண்டாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க பாஜக அரசு செய்யும் சதி இது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. உண்மையில் இந்த நடவடிக்கை சரியா, சதியா?
பீகாரில் வரும் அக்டோபரில் அம்மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட எட்டு கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில், இவர்களில் யாரெல்லாம் தகுதியான வாக்காளர்கள் என்பதைக் கண்டறிவதற்காகத் தீவிர வாக்காளர் சரிபார்ப்புப் பணியைக் கடந்த ஜூன் 25ஆம் தேதி தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இதன் முதல்கட்டப் பணிகள் வரும் ஜூலை 25ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று தொடங்கி செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் இந்தப் பட்டியலில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் போன்றவை செய்யப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடப்படும்.















Add Comment