நாடு, ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்கிறது. அதில் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறது. ஆனால், போர் நிறுத்தத்துக்குத் தானே காரணம் என்று இன்னொரு நாட்டின் அதிபர் திரும்பத் திரும்பச் சொல்கிறார். நமது பிரதமர் அது உண்மை என்றும் சொல்லாமல், இல்லை என்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
மேற்படி ராணுவ நடவடிக்கைக்குக் காரணமான தீவிரவாதத் தாக்குதல் நடந்து முழுதாக மூன்று மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்களுள் ஒருவரைக்கூட இன்னும் கைது செய்யவில்லை. ஆனால் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்து உதவிய அண்டை நாட்டில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெற்றி பெற்றுவிட்டதாகச் சொல்லிவிட்டார்கள். உள் நாட்டில் – ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்குள் செயல்படும் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளை அடையாளம் கண்டு கைது செய்ய முடியாதது ஏன்? இதுவரை இக்கேள்விக்கு பதில் இல்லை.
ஒரு விமான விபத்து நடக்கிறது. இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போகிறார்கள். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், விமானிகளுள் ஒருவர் எரிபொருள் குழாயை அடைத்ததே விபத்தின் காரணம் என்று வெளி நாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்று துப்பறிந்து சொல்கிறது. அதுதான் உண்மையா, அது உண்மையில்லை என்றால் எது உண்மை என்று மக்களுக்குச் சொல்ல வேண்டிய அரசு அமைதியாக இருக்கிறது.















நம் குரல்: இவருக்கு முன் இருந்த பிரதமர்களை சிரிக்கவே தெரியாதவர், பேசாத பிரதமர் என்றெல்லாம் விமர்சனங்கள் இருந்தன. இவர் நன்றாக சிரிக்கிறார் புகைப்படங்களுக்கு. நன்றாக பேசுகிறார் நாட்டின்
பிரச்சினைகளை தவிர்த்து. வெளிநாடுகள் எல்லாம் விருதுகள்
வழங்குகின்றன. இங்குள்ள மக்கள் என்ன விருது வழங்குவார்கள்
என்று தெரியவில்லை.
பாபநாசம் நடராஜன்