Home » தெளிவுபடுத்துமா தேர்தல் ஆணையம்?
நம் குரல்

தெளிவுபடுத்துமா தேர்தல் ஆணையம்?

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரச் சரிபார்ப்பு (SIR) முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு மார்ச் மாத வாக்கில் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக, பிப்ரவரி முதல் வாரத்துக்குள் இந்த SIR பணிகளை முடிப்பதற்குத் தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தச் சரிபார்ப்புப் பணிகள் குறித்து தமிழகத்தில் பரவலாக எதிர்ப்புகளும் அதிருப்திக் குரல்களும் எழுந்துள்ளதைக் கவனிக்க முடிகிறது. இது தேர்தல் ஆணையத்தால் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைதானே என்ற ஆதரவுக் குரல்களும் எழுகின்றன. இந்தச் சரிபார்ப்புப் பணிகளுக்குக் களத்தில் இதிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன? கட்சிகளும் பொதுமக்களும் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அங்கு இதே போன்ற வாக்காளர் தீவிரச் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில் சுமார் அறுபத்தைந்து லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து பெரும் எதிர்ப்புக்குரல் எழுந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!